திண்டுக்கலில் காட்டு யானை ஒன்று இரவில், மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வருவதால் அப்பகுதி அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சேம்படியூத்து பகுதியில் காட்டு யானை ஒன்று இரவில், இங்குள்ள காப்பி தோட்டத்தில் புகுந்து பத்துக்கும் மேற்பட்ட பலா மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து அருகில் இருந்த வீட்டின் கதவை உடைத்து உர மூட்டைகளையும் சேதபடுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த காப்பி தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பயத்துடனே தங்களின் வேலைகளை செய்வதாக வருத்தத்துடன் கூறியுள்ளனர். இந்நிலையில் பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் யானையை காட்டுக்குள் விரட்டுமாறு வனத்துறையினருக்கு சேம்படியூத்து பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

