காரைக்கால்: அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆட்சியரை நேரில்சென்று வாழ்த்திய பாடகர் மனோ!

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த பாடகர் மனோ அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
பிண்ணனி பாடகர் மனோ
பிண்ணனி பாடகர் மனோPT

திருநள்ளாறில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரபல பாடகர் மனோ சாமி தரிசனம்.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாடம் நடத்திய ஆட்சியர் குலோத்துங்கன் குறித்து தொலைக்காட்சியில் பார்த்தது பூரிப்படைந்ததாக கூறி அந்த ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரபல பாடகர் மனோ.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயம். இந்த ஆலயத்திற்கு வந்திருந்த பிரபல திரைப்பட பாடகர் மனோ கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த பாடகர் மனோ அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க நினைத்தார்.

அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசனிபகவான் ஆலயத்திற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்த மனோ, நேராக ஆட்சியர் அலுவலகம் சென்று, ஆட்சியரை சந்தித்தார். “நீங்கள் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியும் சிறப்பாக பணி பணிபுரிந்ததையும், தொலைக்காட்சியில் கண்டு பூரிப்படைந்தேன்” என்று ஆட்சியரை நேரில் கண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார் பாடகர் மனோ.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com