Mano
Manopt desk

RIP Vijayakanth: “நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்...” - பாட்டுப்பாடிய பாடகர் மனோ

“இது மாதிரி மகான்கள் சிலபேர்தான் இருப்பார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் அவர் சம்பாதித்துள்ள சொத்து என்னவென்று பார்க்கலாம்” - பாடகர் மனோ
Published on

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு தொண்டர்கள் ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்த சினிமா பாடகர் மனோ செய்தியாளர்களிடையே பேசினார். அவர், “விஜயகாந்த் படங்களில் அதிக ஹிட் சாங்ஸ் பாடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்து. அதுல, ‘நீ பொட்டு வெச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்’ மாதிரி அற்புதமான பாடல்களும் அடங்கும். எத்தனையோ டூயட், எத்தனையோ சோலோ சாங்ஸ், ‘பாசமுள்ள பாண்டியரு..’ இது எல்லாமே அவருக்கு பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நான் அவரை எப்ப பார்த்தாலும், பாசமா பேசக்கூடிய அன்பு அவர்கிட்ட இருக்கும். இது மாதிரி மகான்கள் சிலபேர்தான் இருப்பார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் அவர் சம்பாதித்துள்ள சொத்து என்னவென்று நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு ஒரு மாமனிதர். பிறந்த எல்லோரும் என்றாவது ஒருநாள் இறக்க வேண்டியதுதான். ஆனால், இந்த மாதிரி அற்புதமான ஒரு மனிதர் போகும்போது, திரண்டு வருகின்ற அந்த பாசமுள்ள மக்களை பார்த்து அந்த இறைவனே அவருக்கு சொர்க்கத்தை 100 சதவிகிதம் தருவார்” என்று பேசினார்.

Mano
RIP Vijayakanth | “அவரு நல்ல ஆரோக்கியமா இருந்திருந்தா...” விஜயகாந்த் குறித்து ரஜினி சொன்ன வார்த்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com