ஆண்டாள் சர்ச்சைக்காக குறிவைக்கப்படுகிறாரா வைரமுத்து? சின்மயி விளக்கம்

ஆண்டாள் சர்ச்சைக்காக குறிவைக்கப்படுகிறாரா வைரமுத்து? சின்மயி விளக்கம்
ஆண்டாள் சர்ச்சைக்காக குறிவைக்கப்படுகிறாரா வைரமுத்து? சின்மயி விளக்கம்

ஆண்டாள் சர்ச்சைக்காக தன் மூலம் வைரமுத்து குறிவைக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு பாடகி சின்மயி பதிலளித்துள்ளார். 

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துவின் முகத்திரையை சின்மயி மூலம் ஆண்டாளே கிழிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

இந்நிலையில், புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாடகி சின்மயிடம் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், ‘ஆண்டாள் சர்ச்சைக்காக வைரமுத்து குறிவைக்கப்படுகிறாரா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு, “ஆண்டாள் சர்ச்சைக்காக வைரமுத்துவை நான் குறிவைக்க வாய்ப்பே இல்லை. #METOO புகாருக்கும், ஆண்டாள் சர்ச்சைக்கும் தொடர்பில்லை. அரசியல் தேவைக்காக #METOO-வை வேறு வழியில் திசை திருப்ப சிலர் முயற்சிக்கின்றனர். ஆண்டாள் சர்ச்சையில் நான் எதுவும் சொல்லவில்லை. அப்போது என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. என்ன சென்றுகொண்டிருந்தது என்றே என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை” சின்மயி பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com