\
இயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்!

இயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்!

இயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்!
Published on

நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சிங்கப்பூர் சென்ற விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் இயக்கப்பட்டு வருகிறது. டிஆர் 567 என்ற எண் கொண்ட இந்த விமானம் இன்று அதிகாலை 3.40 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. விமானத்தில் பணிப்பெண்கள் உட்பட 161 பேர் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, கார்கோ பகுதியில் இருந்து திடீரென புகை வருவதை விமானி கவனித்தார்.

இதையடுத்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானம் உடனடியாக தரையிறங்க சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் விமானம் பத்திரமாகச் சென்னையில் தரையிறங்கியது. தொழில்நுட்பக் குழுவினர் அந்த இயந்திர கோளாறை சரி செய்து வருகின்றனர். இன்று மாலை அந்த விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com