சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?

சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?

ஹேப்பி நியூ இயர் என்று கத்த மாட்டார்கள். ஆடல், பாடல் கொண்டாட்டங்கள் இருக்காது. ஆனால் வீடுகள் தோறும் பூஜைகள் இருக்கும். அதுதான் தமிழ் புத்தாண்டு. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல்நாள்தான் தமிழ் புத்தாண்டு என ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். ஆனால் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதை தமிழர்கள் பன் நெடுகால வழக்கமாக கொண்டுள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். சித்திரை ஒன்றால் தேதியே தமிழ் புத்தாண்டு என்று கூறுபவர்களின் வாதங்கள் குறித்த தொகுப்புதான் இது.

தமிழ் மாதங்களை பொருத்தவரை 60 ஆண்டுகள் கொண்டது ஒரு சுழற்சி. அதாவது ஒரு வருடம் வந்தபின் அடுத்து அந்த வருடம் வருவதற்கு 60 ஆண்டுகள் ஆகும். இப்போது பிறந்திருப்பது பிளவ வருடம். இதற்கு முன்பு 1961 ஆம் ஆண்டுதான் பிளவ வருடம் பிறந்தது. இதன்பின்னர் 2080ல் தான் பிளவ வருடம் வரும். 12 மாதங்களில் சித்திரை மாதமே முதலாவது எனவும் இது சங்க இலக்கியமான நெடுநெல்வாடையில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தமிழ் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com