தமிழ்நாடு
சிம்புவின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைந்த இளைஞர்கள்
சிம்புவின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைந்த இளைஞர்கள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வலியுறுத்தி நடிகர் சிம்பு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, அவரது வீட்டு முன்பாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு பொங்கலின்போது நடத்த வலியுறுத்தி பத்து நிமிட மவுனப் போராட்டத்துக்கு நடிகர் சிம்பு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கானோர் கூடினர். கைகளில் கருப்பு கொடியுடனுடம், கருப்பு நிற உடையுடனும் அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் சிம்பு தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருப்புநிற ஆடையணிந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.