ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற பூர்ண சுந்தரிக்கு பயிற்சியளித்த சைலேந்திர பாபு

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற பூர்ண சுந்தரிக்கு பயிற்சியளித்த சைலேந்திர பாபு

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற பூர்ண சுந்தரிக்கு பயிற்சியளித்த சைலேந்திர பாபு
Published on

சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பூரண சுந்தரி வெற்றி பெற்று இந்தியாவையே உற்றுநோக்க வைத்தார். இவருக்கு நேர்முகத் தேர்வில் வெற்றிபெற பயிற்சியளித்தவர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்கவும் இளைஞர்கள் சமுகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில்  ஈடுபடவும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார், சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ”கண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். நேர்முகத் தேர்வு பயிற்ச்சி அளித்ததில் பெருமை நமக்கு” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பூர்ண சுந்தரி நான்காவது முறையாக எழுதி வெற்றி பெற்றுள்ளார். அதுவும், தேர்ச்சி பெற்ற 829 பேரில் 296 வது இடம்  பிடித்து சாதித்திருந்தார். பார்வையற்று நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியால் அவர்களை வாசிக்க வைத்து காதுகளையே கண்களாக்கிய பூர்ண சுந்தரியின் வெற்றி குறித்தப் பேச்சுதான் இன்று எல்லோர் காதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com