\
3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு

3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு

3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு
Published on

சிவகாசியில் போக்குவரத்து சிக்னல்கள் 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பிரதான சாலைகளில் சுமார் 15 பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட இந்த சிக்னல் மின் விளக்குகள் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் விபத்தும் போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

நான்கு முனை சந்திப்புகளில் சிலர் விதிமுறையை மீறி வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், விரைவில் சிக்னல் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com