\
Accused
Accusedpt desk

SI-ஐ தாக்க முயற்சித்த தேடப்படும் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயற்சி

ஈரோடு அருகே வீட்டில் பதுங்கியிருந்த தேடப்பட்டு வரும் குற்றவாளியை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளரை, அரிவாளால் தாக்க முயற்சி நடந்துள்ளது.
Published on: 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையத்தில், கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலியை சேர்ந்த சிவா (எ) சிவசுப்பு என்பவர் உள்பட நான்கு குற்றவாளிகள் பதுங்கி இருந்துள்ளானர். இதனையறிந்த திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சிவசுப்பு உள்பட மற்றவர்களையும் பிடிக்க வந்துள்ளனர்.

police
police pt desk

அப்போது உதவி ஆய்வாளர் ஆண்டோ என்பவர் சிவசுப்பு பதுக்கி இருந்த வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது, சிவசுப்பு ஆண்டோவை அரிவாளால் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தன் பாதுகாப்பு மற்றும் சக காவலர்களின் பாதுகாப்பை கருதி உதவி ஆய்வாளர் ஆண்டோ துப்பாக்கியால் ஒரு ரவுண்ட் சுட்டுள்ளார். இதில் சிவசுப்பு தப்பித்துவிட்டார். துப்பாக்கி குண்டு வீட்டின் சுவற்றில் பாய்ந்தது. இந்த பதில் தாக்குதலில் இரு தரப்பினருக்கும் எந்தவித காயமும் பாதிப்பும் ஏற்படாத நிலையில் தப்பித்தனர். இதற்கிடையே சிவசுப்பு உள்பட அனைத்து குற்றவாளிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி உதவி ஆய்வாளர் ஆண்டோ பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சிவசுப்பு மீது கொலை, கொள்ளை, சட்ட விரோதமாக ஆயுதங்கள், வெடி மருந்துகள் பயன்படுத்தல், கஞ்சா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. உதவி ஆய்வாளர் ஒருவர் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com