பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்துச்சென்றால் அபராதமா? வேதனையுடன் ஆட்டோ ஓட்டுநர் வீடியோ

பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்துச்சென்றால் அபராதமா? வேதனையுடன் ஆட்டோ ஓட்டுநர் வீடியோ

பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்துச்சென்றால் அபராதமா? வேதனையுடன் ஆட்டோ ஓட்டுநர் வீடியோ
Published on

பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டதால், வேதனையடைந்த அந்த ஓட்டுநர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன். இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த வாரம் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி ஒருவரை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அவரை அங்கு இறக்கிவிட்டு திரும்பிய கிருஷ்ணனை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கிருஷ்ணன் விவரத்தைக் கூறும் முன்னரே 500 ரூபாய் அபாரதத் தொகைக்கான ரசீதை கிழித்து கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த வேதனையடைந்த கிருஷ்ணன், தனது மனக்குமுறலை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். அதில் “என்னுடைய தொழிலில் நான் எந்த கர்ப்பிணியிடமும் பணம் பெற்றதில்லை. காவலர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கும் குடும்பம் உள்ளது. நாளை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது யாராவது ரோட்டில் அடிபட்டுக் கிடந்தாலோ எந்த ஆட்டோ ஓட்டுநர் உதவுவார். அரசு கொடுக்கும் நிவாரண நிதியை அபாரதம் என்ற பெயரில் காவலர்கள் வசுலித்துக் கொண்டால் நாங்கள் சாகத்தான் வேண்டும் எனக் கூறி” தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த மதுரைக்கு புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை அழைத்து பேசியதோடு அபாராதத் தொகையை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com