உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி - உதகையில் நாளை கடைகள் அடைப்பு

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி - உதகையில் நாளை கடைகள் அடைப்பு
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி - உதகையில் நாளை கடைகள் அடைப்பு

உதகையில் நாளை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை கடைகள், உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 80% காயங்களுடன் உயிர்தப்பிய கேப்டன் வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகையில் நாளை(10.12.2021) கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை கடைகள், உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com