\
ஜல்லி‌க்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் லட்சக்கணக்கான கடைகள் அடைப்பு

ஜல்லி‌க்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் லட்சக்கணக்கான கடைகள் அடைப்பு

ஜல்லி‌க்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் லட்சக்கணக்கான கடைகள் அடைப்பு
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று ஒருநாள் முழுவதும் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புகள் அறிவித்துள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று லட்சக்கணக்கான கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக வணிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் காலை முதல் மாலை 6 மணி வரை இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் முழுவதும் கடை அடைப்பு நடத்துவது என வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com