கிருஷ்ணகிரி: காலணி வாங்குவதில் தகராறு : அடிதடி, அரிவாள் வெட்டு

கிருஷ்ணகிரி: காலணி வாங்குவதில் தகராறு : அடிதடி, அரிவாள் வெட்டு

கிருஷ்ணகிரி: காலணி வாங்குவதில் தகராறு : அடிதடி, அரிவாள் வெட்டு
Published on

கிருஷ்ணகிரியில் காலணி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கடந்த 7-ம் தேதி பைசு என்பவரின் கடையில், லோகேஷ் என்பவர் 1,500 ரூபாய்க்கு காலணி வாங்கி உள்ளார். ஆனால் காலணி பிடிக்கவில்லை என்று கூறி, அதனைத் திருப்பி கொடுத்துவிட்டு பணம் கேட்டதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லோகேஷ், பைசுவை சாலையில் ஓடஓட விரட்டி வெட்டியுள்ளார். அந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் நடந்த அரிவாள் வெட்டால் பரபரப்பு நிலவியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com