திருவள்ளூர்: 1 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் இழந்த கடை! ஏன் தெரியுமா?

வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயைவிட 1 ரூபாய் அதிகமாக விற்பனை செய்த கடை மீது, 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆண்டரசன் பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ். இவர், பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில், ஒரு ஜோடி காலணிகளை வாங்கியுள்ளார் இவர். அதில் 279 ரூபாய் MRP இருந்த நிலையில், கடை நிர்வாகம் கூடுதலாக 1 ரூபாய் வைத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

வழக்கறிஞர்
வழக்கறிஞர்

இதுகுறித்து சதீஷ் கடை மேலாளரிடம் கேட்கையில் அவர், ’இஷ்டமிருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்’ எனக் கூறி அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் சதீஷ் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஓராண்டாக அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் லதா மகேஷ்வரன், “பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷுக்கு நஷ்ட ஈடாக 1 லட்சம் ரூபாயும், வழக்கு நடத்திய செலவாக 5 ஆயிரம் ரூபாயும் என்ற அடிப்படையில் கடை உரிமையாளர் தரப்பில் 1 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com