விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் புதன்கிழமை வாகம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அவர்.
குழந்தையின் கைவிரல் இடுக்குகளில் சதை வளர்ச்சி இருந்ததால் மேல் சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக தாய் ராதிகா மருத்துவமனை வளாகத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் தாய் மற்றும் குழந்தை வராண்டாவில் இருக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை உள்ளது.
“இதுகுறித்து மகப்பேறு நிர்வாகிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி உறைவிட மருத்துவர் ரவிக்குமார் தெரிவித்தார்.