’மொபைல்போன் + புத்தக மூட்டை..’ குழந்தைகளுக்கு வரும் எலும்பு தேய்மானம்! அதிர்ச்சி ரிப்போர்ட்
சீனா, ஐரோப்பா போன்ற நாடுகள்ல பள்ளி மாணவர்கள் கிட்ட நடத்தப்பட்ட ஒரு ஆய்வுல, குழந்தைகள் அதிக நேரம் செல்போன், டிவி, லேப்டாப் பயன்படுத்துவதால, அவங்களோட கழுத்து, முதுகு எலும்புகள்ல தேய்மானம் அதிகரிச்சிருக்கிறதா கண்டுபிடிச்சிருக்காங்க. இதோட, பள்ளிக்கூடத்துக்கு அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை எடுத்துட்டுப் போறதும், இந்த பாதிப்புக்கு இன்னொரு முக்கியமான காரணமா இருக்கு.
ஒரு மணி நேரம் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால், குழந்தைகளோட முதுகு மற்றும் கழுத்து எலும்புகள் 8 சதவீதம் பலவீனமடைவதாக ஆய்வில் தெரியவந்துருக்கு.
ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..
இந்த ஆய்வுல இன்னொரு அதிர்ச்சியான விஷயமும் வெளியாகி இருக்கு. இளமை பருவத்திலேயே எலும்புகள் பலவீனமடைவதால, 60 வயசுல வர வேண்டிய எலும்பு தொடர்பான பிரச்சினைகள், இப்போ 30 வயசுலயே வர ஆரம்பிச்சிடுச்சு. இதனால, அடுத்த தலைமுறையோட உடல் அமைப்பே மாறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.
டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துறதால வர்ற கண் பாதிப்பை விட, எலும்பு பாதிப்புதான் எதிர்காலத்துல மிகப் பெரிய பிரச்சனையா இருக்கும்னு மருத்துவர்கள் எச்சரிக்கிறாங்க. எலும்பு தேய்மானத்தோடு, மனரீதியான நோய்களும் குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்களைப் பார்த்துதான் வளருவாங்க. அதனால, பெற்றோர்களும் செல்போன்களை அதிகம் பயன்படுத்துறதைக் குறைச்சு, அடுத்த தலைமுறைக்கு வர இருக்கும் இந்தப் பெரிய ஆபத்திலிருந்து அவங்கள மீட்கணும்னு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுக்கிறாங்க.
அதிக ஸ்கிரீன் டைம் பார்ப்பது ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள், லேப்டாப், செல்போனை தொடர்ந்து பார்ப்பதால் தலையின் அமைப்பே மாறுபடலாம் எனவும், தலையின் அமைப்பு மாறுபட்டால் கழுத்து, தலை, தோள்பட்டை, கை, முதுகு வலி வரக்கூடும் என்றும், செல்போனை குனிந்தபடியே பார்த்தால் முதுகு தண்டுவடத்தின் அமைப்பும் மாறி வலி ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
எந்த வயதினருக்கு எவ்வளவு ஸ்கிரீன் டைம்?
2 வயது - போன் தேவையில்லை
2 முதல் 5 வயது - அதிகபட்சம் 1 மணி நேரம்
5 முதல் 15 வயது - அதிகபட்சம் 2 மணி நேரம்