தமிழ்நாடு
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - எம்பி மாணிக்கம் தாகூர்
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - எம்பி மாணிக்கம் தாகூர்
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாளானது இன்று கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல்வாதிகள், திரைப்பலங்கள் உள்ளிட்ட பலர் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.