''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை!

''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை!
''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை!

கடந்த ஆண்டு கஜா புயலால்‌ கரை ஒதுங்கிய கப்பல் கடலுக்கும் செல்ல முடியாமல் உடைக்கவும் முடியாமல் கஜாவின் நினைவுச் சின்னமாக காட்சியளிக்கிறது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு தூர்வாரும் பணிக்காக கடந்த ஆண்டு கப்பல் ஒன்று வந்தது. அடுத்த பணிக்காக காரைக்கால் அருகே நடுக்கடலில் நிறுத்தியிருந்தபோதுதான் கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கியது இந்த கப்பல். புயலில் சிக்கி மேலவாஞ்சூர் மீனவ கிராமம் அருகே கரை தட்டி நின்ற கப்பலை மீட்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கரை தட்டிய கப்பல் சேதமடைந்திருந்ததாலும், கடலுக்குள் கொண்டு சென்றால், கடல் நீர் உள்ளே புகுந்து கப்பல் முழுவதுமாக மூழ்கிவிடும் என்பதாலும், கப்பலை மீட்கும் முயற்சிகள் கைவிடப்பட்டன. 

மீனவ கிராமங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் கப்பல் உடைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசிடம் அனுமதி பெற முயற்சித்தும் சட்டப்போராட்டம் தொடருவதால் கப்பலை எதுவும் செய்யமுடியவில்லை.

இந்த சந்தர்ப்பதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் கப்பலுக்குள் சென்று லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் செல்கின்றனர். இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் திருபட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடலுக்கு செல்லமுடியாமல், உடைக்கவும் முடியாமல் நிற்கும் இந்தக் கப்பல், கஜா புயலால் மக்கள் பட்ட துயரங்களின் குறியீடாக அங்கு நின்று கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com