\
குழந்தைக்கு வாங்கிய கடலை மிட்டாயில் கூரிய தகரக் கம்பி - கோவையில் அதிர்ச்சி!

குழந்தைக்கு வாங்கிய கடலை மிட்டாயில் கூரிய தகரக் கம்பி - கோவையில் அதிர்ச்சி!

குழந்தைக்கு வாங்கிய கடலை மிட்டாயில் கூரிய தகரக் கம்பி - கோவையில் அதிர்ச்சி!
Published on

கோவையில் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த கடலை மிட்டாயில் தகர கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சாயிபாபா காலனி பகுதியில் உள்ள நொறுக்ஸ் என்கிற சிற்றுண்டி கடையில் தனது குழந்தைக்கு கடலை மிட்டாய் வாங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று தனது குழந்தைக்கு கடலை மிட்டாயை எடுத்து கொடுத்துள்ளார். அந்த குழந்தை கடலை மிட்டாயை சாப்பிட்டுவிட்டு பாதியிலேயே பிரபுவிடம் கொடுத்துள்ளது. மீதம் இருந்த மிட்டாயை பிரபு சாப்பிடும்போது, அதனுள் ஒரு சென்டி மீட்டர் நீளமுள்ள கூர்மையான தகர கம்பி இருந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார். அப்போது, அவர்கள் முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com