Gold seizedfile
தமிழ்நாடு
சார்ஜா டூ திருச்சி | விமானத்தில் கடத்திவரப்பட்ட 1.395 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 1 கோடியே 22 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 395 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர் அப்போது ஒரு பயணி ஐஸை தூளாக்கும் இயந்திரத்தில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஒரு கோடி 22 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 395 கிராம் எடையுள்ள தங்கத்தை பயணியிடமிருந்து பறிமுதல் செய்து அவரிடம் தொடர் லிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.