Gold seizedpt desk
தமிழ்நாடு
ஷார்ஜா டூ திருச்சி: பேஸ்ட் வடிவில் விமானத்தில் கடத்திவரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் மதிப்புள்ள 1074 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) என்ற பயணியின் நடவடிக்கைகள் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
air indiapt desk
சேலம்| வீட்டுக்கே டோர் டெலிவரியாகும் கள்ளச்சாராயம் - அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ! எஸ்.பி விளக்கம்
அப்போது, அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 73.31 லட்சம் மதிப்பிலான 1074 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.