தமிழ்நாடு
ஷேர் கார் சேவைகள் மேலும் 21 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம்
ஷேர் கார் சேவைகள் மேலும் 21 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம்
சென்னையில் 21 மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பயணிகளுக்கு ஷேர் கார்கள் சேவையை விரிவுபடுத்த உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் கார் சேவைகள் இருப்பதாக தெரிவித்துள்ள மெட்ரோ, கூடுதலாக 21 ரயில் நிலையங்களில் இந்தச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பயணிகள் கடைசி நிமிடத்தில் ரயிலை தவறவிடுவதை தடுக்கும் வகையில் இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பயணிகள், மெட்ரோவின் CMRL ஆப் மூலம் ஷேர் காரை முன்பதிவு செய்து சேவையைப் பெறமுடியும். இதற்காக மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.