பேரிடர் மீட்பு குழுவினருக்கான பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்த சங்கர் ஜிவால்

பேரிடர் மீட்பு குழுவினருக்கான பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்த சங்கர் ஜிவால்
பேரிடர் மீட்பு  குழுவினருக்கான பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்த சங்கர் ஜிவால்

பொதுமக்களை மழைகால விபத்துகளிலிருந்து பாதுகாக்க, பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்பு குழுக்கள் (Tamil Nadu State Disaster Response Force) அமைக்கப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். 12 காவல் மாவட்டங்களுக்கும் ஒரு சிறப்பு காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 மீட்பு குழுவினர் சென்னை ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எழும்பூர், ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல் துறை பேரிடர் மீட்பு (Tamil Nadu State Disaster Response Force) குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை (Equipments) பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com