மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..!

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..!

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..!
Published on

மாற்றுத் திறனாளியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர், கர்ப்பத்தை கலைக்கக்கோரி மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருச்சி துறையூர் பச்சைமலை கிராமத்தில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி செல்வி( வயது 19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிறக்கும்போதே நரம்புத் தளர்ச்சி பிரச்சனையால் தலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்வியின் பெற்றோர் விவசாய வேலை செய்வதால், செல்வியை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனிடையே திடீரென செல்விக்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்படவே அவரை அருகிலுள்ள துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து செல்வியிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதாப்(21) என்பவர் செல்வியை பலமுறை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பிரதாப் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.

ஆனால் பிரதாபோ இதற்கு நான்தான் காரணம் என்று ஒத்துக்கொண்டு, பணம் தருகிறேன் கருவை கலைத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தன்னால் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். செல்விக்கு நரம்பு தளர்ச்சி உள்ளதால் 5 மாத கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. எனவே இதற்கு காரணமான பிரதாப் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com