மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அதிமுக பிரமுகரை தேடும் போலீஸ்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக ஒன்றிய பொருளாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரி. இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிவசங்கரியை விட்டுவிட்டு அவரது கணவர் பிரிந்து மற்றொரு திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் சிவசங்கரி தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், பெரியப்பா முறையான செல்வராஜ் சிவசங்கரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
முந்திரிக்காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் அவர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. தற்போது சிவசங்கிரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பவானி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர். இவர் அதிமுக ஒன்றிய பொருளாளாக உள்ளார்.
இதனிடையே இந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பல்ல என ஜெயங்கொண்டம் டி.எஸ்.பியிடம் செல்வராஜ் மனு கொடுத்துள்ளார்.