தமிழ்நாடு
ஷேர் ஆட்டோவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. 3 பேர் கைது
ஷேர் ஆட்டோவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. 3 பேர் கைது
சிவகங்கையில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுனர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிற்கு இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
ஷேர் ஆட்டோவில் தனியாக சென்ற பெண்ணை, ஓட்டுநர் சிரஞ்ஜீவி பாண்டியன் அருகில் உள்ள வீரவலசை கண்மாய்க்கு கடத்திச் சென்றதாக தெரிகிறது. செல்போன் மூலம் தனது நண்பர்கள் மூன்று பேரை அங்கு வரவழைத்துள்ளார். அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியதாக, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள சந்தோஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.