\
வீட்டில் விளையாடிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் கைது

வீட்டில் விளையாடிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் கைது

வீட்டில் விளையாடிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் கைது
Published on

வால்பாறை அருகே 7 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சத்திரன். இவர் அப்பகுதியில் திமுக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவரது மகன் தவின்(17). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12-ஆம் தேதி மாலை தனது வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமையில் சேர்த்தனர். சிறுமியின் உடலில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிறுமியை பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து உயர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் இளைஞர் தவின் மீது வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகார் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது இளைஞர் தவின் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து காயப்படுத்தியது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தவினை பொள்ளாச்சி மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் போன்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் தவின் திமுக பிரமுகரின் மகன் என்பதால் இந்தக் கொடூர சம்பவத்தை மறைக்க பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com