பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதுகாக்கும் சென்னை பிஎஸ்பிபி பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி கோரிக்கை வைத்திருக்கிறார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “சென்னை - கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பள்ளி நிர்வாகம், குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்காமல், கடுமையான நடவடிக்கை எடுத்து, இத்தகைய முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மத்திய - மாநில பள்ளிக் கல்வித்துறையினர், இதில் உரிய விசாரணை செய்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உறுதி செய்யவேண்டும்” என தெரிவித்தார்