8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி
Published on

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த பூதப்பாடியில் அரசு உதவி பெறும் புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், கோனேரிப்பட்டையைச் சேர்ந்த மாணிக்கம் - தவமணி தம்பதியினரின் மகள் 8ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்காக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபு அந்த மாணவியை அழைத்துச் சென்றிருந்ததாக தெரிகிறது. அங்கு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. அதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்ததால் கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன்பாக திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஆசிரியர் பிரபுவைக் கைது செய்யக் கோரி ஈரோடு - மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் வந்து சமாதானம் கூறியும் கூட்டத்தினர் கலைய மறுத்ததால், லேசான தடியடி நடத்தப்பட்டது. இதற்கிடையே பங்களாபுதூர் அருகே தலைமறைவாக இருந்த ஆசிரியர் பிரபுவை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, 2 மணி நேரமாக நீடித்த மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com