பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை புகார்: விசாரணை அறிக்கையை அரசிடம் வழங்கிய விசாகா கமிட்டி!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை புகார்: விசாரணை அறிக்கையை அரசிடம் வழங்கிய விசாகா கமிட்டி!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை புகார்: விசாரணை அறிக்கையை அரசிடம் வழங்கிய விசாகா கமிட்டி!
Published on

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை தந்த புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் விசாகா கமிட்டி வழங்கியது.

முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். புகார் கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்.பி ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிடத்தில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிக்க தமிழக அரசின் திட்டம் - வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா குழு, கடந்த மாதம் 26 ஆம் தேதி விசாரணையை தொடங்கியது. 14 சாட்சிகளிடம் விசாகா கமிட்டி நடத்திய விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com