விழுப்புரம் பாஜக தலைவர் மீது பாலியர் புகார் அளித்த மகளிரணி செயலாளர் நீக்கம்

விழுப்புரம் பாஜக தலைவர் மீது பாலியர் புகார் அளித்த மகளிரணி செயலாளர் நீக்கம்
விழுப்புரம் பாஜக தலைவர் மீது பாலியர் புகார் அளித்த மகளிரணி செயலாளர் நீக்கம்

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது பாலியல் புகார் கொடுத்த அதே கட்சியைச் சேர்ந்த மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மாவட்ட பாஜக தலைவருமான கலிவரதன் அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் காயத்ரியிடம் 5 லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், காயத்ரியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த காயத்ரி கூறும்போது “ விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் விஏடி கலிவரதன் என்னை பாலியல் கொடுமை செய்தார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து மிரட்டி என்னிடம் அவர் 5 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும் இது குறித்து நான் வெளியே சொன்னால் என்னையும் எனது குடும்பத்திபரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்” என்று கூறினார்.

இந்நிலையில் அவர் மாநிலத் தலைவர் எல்.முருகனின் ஒப்புதலோடு, கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com