குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி - 2 பேருக்கு சிறை

குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி - 2 பேருக்கு சிறை
குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி - 2 பேருக்கு சிறை

காஞ்சிபுரத்தில் மாமனார் மற்றும் மருமகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதில் 14 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தளி பகுதியில் ஆடு மேய்கும் 14 வயது சிறுமியை அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகதாஸ் ஆகிய இருவரும் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததாகவும், இதை சிறுமியின் உறவினர்கள் வெளியே கூறாமல் மறைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் காவல்துறைக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணன் மற்றும் முருகதாஸ் இருவரும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இருவரையும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com