மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக பள்ளி மாணவன் உட்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
10 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, கடந்த 2 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரை வீட்டில் விட்டுவிட்டு, பெற்றோர் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி, அருகிலுள்ள கோயிலில் இருந்த சிறுமியை மயானத்திற்கு அழைத்துச் சென்று 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப் பக்கமாக சென்றவர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
சிகிச்சைக்கு பின் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் காவல்துறையினர் கோனேரிளவு பகுதியைச் சேர்ந்த குமார், தாமரைச்செல்வன், வேடிச்சி, பள்ளி மாணவன் பிரபு ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த 4 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.