\
இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: காவலர் மீது புகார்

இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: காவலர் மீது புகார்

இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: காவலர் மீது புகார்
Published on

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த காவலர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அசோகன் டாக்டர் தெருப் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் அண்ணாமலை(29). இவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குபேரன் மகள் மேகலா (28) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உடலறவு கொண்டதாகத் தெரிகிறது. அதனால் கரு உண்டான மேகலா இரண்டு முறை கருக்கலைப்பு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே அண்ணாமலைக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கு அவரது பெற்றொர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை அறிந்த மேகலா தனது குடும்பத்துடன் அண்ணாமலை வீட்டிற்குச் சென்று அவரது தாயாரிடம் நடந்த விஷயங்களை கூறி அண்ணாமலையை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதற்கு அண்ணாமலை குடும்பத்தார் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.இதனால் வேதனையடைந்த மேகலா அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com