சென்னை: பாலியல் தொல்லை கொடுத்து 10 வயது சிறுமி மாடியிலிருந்து வீசி கொலை
சென்னையில் பாலியல் தொல்லை கொடுத்து 10 வயது சிறுமியை மாடியிலிருந்து வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத்தை சேர்ந்தவர் சீனிவாசன். பானிப்பூரி கடை வைத்திருக்கும் இவர், தனது மனைவி மகளுடன் மதுரவாயல் எம்.எம்.டிஏ பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சீனிவாசன் குடும்பத்தினர் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது இயற்கை உபாதை கழிக்க சீனிவாசனின் 10 வயது மகள் வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. எனவே சந்தேகமடைந்த பெற்றோர் அப்பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் சிறுமியை காணவில்லை.
இதனால் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து தங்களது வீட்டின் மூன்றாவது மாடியின் பின்புறம் சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் பெற்றோருடன் சேர்ந்து சிறுமியை தேடியதும், அவர்தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசியதும் தெரியவந்தது.