நெல்லையில் பாதாள சாக்கடைத்திட்டம் - ரூ.292 கோடி ஒதுக்கீட்டில் முதற்கட்ட பணிகள்

நெல்லையில் பாதாள சாக்கடைத்திட்டம் - ரூ.292 கோடி ஒதுக்கீட்டில் முதற்கட்ட பணிகள்

நெல்லையில் பாதாள சாக்கடைத்திட்டம் - ரூ.292 கோடி ஒதுக்கீட்டில் முதற்கட்ட பணிகள்
Published on

தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நெல்லை மாநகரத்தில் முதல் கட்டமாக 292 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு சுதந்திரதினத்தில் 25 லட்சம் நிதியும் விருதும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் பேசும் போது இந்த விருது கிடைக்க துணையாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் ஸ்மார்ட் சிட்டியாக நெல்லை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த திட்டத்திற்காக 1,237 கோடி வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுகளை தடுக்க விரைவில் பாதாளசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இரண்டுகட்டமாக நடைபெறும் இந்த பணிகளுக்கான முதல்கட்ட பணிக்கு 292 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் என்றும், இரண்டாம்கட்ட பணிகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். மேலும் மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்திற்காக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர்திட்டம் செயல்படுத்த ரூ.230 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com