ஓட்டேரியில் மழைநீருடன் கலந்த கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
வடகிழக்கு வருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. சென்னை ஓட்டேரியை அடுத்த நம்மாழ்வார்பேட்டையில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஓட்டேரி கால்வாய் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றதை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் பாதுகாப்பு நலன் கருதி 2வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழை நீருடன், கழிவு நீர் கலந்துள்ளதால் தொற்று நோய் எற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆய்வு நடத்திய ஆட்சியர், தேங்கியுள்ள நீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.