இடியுடன் கூடிய அதீத கனமழை இருக்கும்: பேரிடர் மேலாண்மை ஆணையம்

இடியுடன் கூடிய அதீத கனமழை இருக்கும்: பேரிடர் மேலாண்மை ஆணையம்
இடியுடன் கூடிய அதீத கனமழை இருக்கும்: பேரிடர் மேலாண்மை ஆணையம்

காரைக்கால், நாகப்பட்டினம் புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் ( மாலை 6 மணி நிலவரப்படி) கடுமையான இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ள அறிவிப்புகளில் “தமிழ்நாடுஅரசு 26.11.2020 அன்று 16 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், அரியலூர் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடுஅரசு 26.11.2020 அன்று 16 மாவட்டங்களில் உள்ள
உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இருப்பினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும்.
— TN SDMA (@tnsdma) November 25, 2020

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை அரியலூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். புதுச்சேரியைச் சுற்றியுள்ள காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே 25 ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 2020 நவம்பர் 26 அதிகாலை நேரங்களில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக 120-130 கிமீ வேகத்தில் 145 கிமீ வேகத்தில் காற்று வீசும்” என தெரிவித்துள்ளது.

25.11.2020 இரவு 08.30 நிலவரப்படி
நிவர் புயல் வடமேற்காக நகர்ந்து காரைக்கால் மாமல்லபுரம் இடையே 25.11.2020 நள்ளிரவு முதல் 26 11. 2020 அதிகாலைக்குள் கரையை கடக்க கூடும்.. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும்.
— TN SDMA (@tnsdma) November 25, 2020

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com