“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை

“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6 கட்டங்களாக நடைபெற்றுள்ள அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் நகர நாகரீக வாழ்க்கை முறையை அறியும் வகையில், தங்க ஆபரணங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் போன்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com