சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததே முதல் வெற்றி: ஓபிஎஸ்
சசிகலா குடும்பத்தை அதிமுகவை விட்டு ஒதுக்கி வைப்பது என்ற முடிவை எடுத்திருப்பதே தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருக்கக் கூடாது என முடிவு எடுத்து அறிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் தங்களின் தர்ம யுத்தத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி இது என கூறியுள்ளார்.
அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்.ஜி.ஆர் பாதையில் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார். அப்படிப்பட்ட இயக்கம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் ஒதுங்கிவைக்கப்பட்டதே முதல் வெற்றி. தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பினரும் பேசி முடிவெடுப்போம். தர்ம யுத்தம் தொடரும் என அவர் கூறினார்.