ஜனவரி 5 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அறிவிப்பு

ஜனவரி 5 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அறிவிப்பு
ஜனவரி 5 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்  ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு புத்தாண்டு தொடக்கத்தின் போதும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். புதிய அரசு பொறுப்பேற்ற போது சுமார் 40 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்ததாகவும், அதனால் சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் நடந்து முடிந்துள்ளது என்றும், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,  நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். காகிதம் இன்றி, அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும்  என சொல்லப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்வது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தில் சட்டப்பேரவை மேலவையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அது தொடர்பான சட்ட மசோதாவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  மேயர் வேட்பாளரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கான முறையை அமல்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவையும் தமிழக அரசு நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை இருக்கிறது. தமிழகத்தில் 2006ம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியின் போது மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆனால், அதன்பின் 2011ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு மீண்டும் அமைந்துள்ள நிலையில் இம்முறை சட்ட மேலவையை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com