HEADLINES |சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை முதல் மல்லை சத்யாவின் புதிய கொடி வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை முதல் புதிய கொடியை அறிமுகப்படுத்திய மல்லை சத்யா வரை விவரிக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததில், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகள், கல்வியை தொடரும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்க அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் புதிய கொடியை அறிமுகப்படுத்திய மல்லை சத்யா, மதிமுகவை ’திராவிட இயக்கத்தின் திரிபுவாதி’ என விமர்சித்தார்.
வரி செலுத்துவோர் கோரிக்கை விடுத்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
’குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
75 சதவிகித வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதியுடன் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி கிராண்ட் சுவிஸ் தொடரை வென்றார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய வீரர்கள் கைகுலுக்காத விவகாரத்தில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக திட்டமிட்டுள்ளது.