\
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்pt

தமிழ் பெயர் வைக்க இனி தனி இணையப்பக்கம் - அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்ப் பெயர்களை பெற்றோர் வைப்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இதுக்குறித்தான அறிவிப்பு ஒன்றினை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னையில் நேற்று நடந்த, மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தனது மகளுக்கு அனுஷா என்று வேலு பெயர் வைத்துள்ளார். அது தமிழ்ப்பெயர் அல்ல. ஆனால், மணமக்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு, அழகான தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள, நிதின் சிற்றரசு என்பவர், ”குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே! ” என்று தெரிவித்திருந்தார்

இதற்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

" தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்! " என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com