"அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யுங்கள்" - அண்ணாமலை

கோவை ஈச்சனாரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக தேர்தலுக்கு பிறகு நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, சிடி ரவி,எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Annamalai
AnnamalaiPT Desk

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க முடியாது எனவும் இது தொடர்பாக அவரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக தேர்தலுக்கு பிறகு நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, சிடி ரவி,எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பட உள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நாளை தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணியை முன்னிலைப்படுத்தி மிகப்பெரிய பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கள்ளச்சாராய கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அரசுக்கு எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒரு பக்கம் டாஸ்மாக் என்பது வெள்ளம் போல ஒடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் கள்ளச்சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மதுவிற்கு அடிமையானவர்கள் டாஸ்மாக்கில் மதுவை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் கள்ளச் சாராயத்தை வாங்குகிறார்கள். இதனை கண்டித்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி - அண்ணாமலை
செந்தில் பாலாஜி - அண்ணாமலைPT

மேலும், “24ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி குழு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளது. அப்போது கள்ளச்சாராய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக அவரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com