“மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என்று கூறவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்

“மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என்று கூறவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்

“மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என்று கூறவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்
Published on
'மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்' எனச் சாடியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்தடை நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்துள்ள விளக்கத்தில், ''கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை. அவை மின் கம்பிகளில் உரசுகின்றன; அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன - என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.
அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் டாக்டர் ராமதாஸ் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம். அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்!
பறவைகள், அணில்கள், கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று. திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்'' என்று கூறியுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com