senthil balaji brother gets new high court order
செந்தில் பாலாஜிpt web

செந்தில்பாலாஜி சகோதரர் மனு.. நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் அனுமதி!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on
Summary

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அசோக்குமாரின் பயண திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, அசோக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது. இந்நிலையில், அனுமதி உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி அசோக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

senthil balaji brother gets new high court order
சென்னை உயர்நீதிமன்றம்x page

இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்காவுக்கு தன்னுடன் தனது மனைவிக்கு பதிலாக மகள் வர உள்ளதாகவும், பயண தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றங்களுக்கு அனுமதிக்குமாறு அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா சென்றதும் இந்திய தூதரகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்குப் பதிலாக, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க அனுமதிக்குமாறும் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைத்து உத்தரவிட்டனர்.

senthil balaji brother gets new high court order
கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் புதிதாக கட்டிவரும் வீட்டில் IT அதிகாரிகள் ஆய்வு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com