நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக செந்தாமரைக்கண்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்டபின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”முறையான ஆவணங்கள் இன்றி பொது மக்களுக்கு கடன் கொடுத்து வசூலிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை மாநகரில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகளவில் சிசிடிவி கடைகள் மற்றும் வீடுகளுக்கு முன் பொருத்தும்போது குற்றங்களை கண்டறிவதற்கும் குற்றங்கள் குறைவதற்கும் அது வாய்ப்பாக அமைகிறது. எனவே, வரும்காலங்களில் சிசிடிவி எண்ணிக்கைகளை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
அதேநேரத்தில் மக்களும் தங்கள் வீடுகள் மற்றும் கடைகள் முன்பாக சிசிடிவி பொருத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறினார்.