”நிலைமை முற்றிவிட்டது; பாஜக - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” - பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்
”மக்கள் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்போம்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவன நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்றுகூடச் சொல்வேன்" என குறிப்பிட்டிருந்தார்.
அதிமுக அரசை நேரடியாக அவர் விமர்சித்திருந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, இரு கட்சிகள் இடத்தும் விரிசல் அதிகமாகியுள்ளதா? என்பது குறித்து புதிய தலைமுறைக்கு பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ”அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையே தற்போது நிலைமை முற்றியிருக்கிறது” என்கிறார். இதுகுறித்து அவர் பேசியதன் முழுவிபரத்தை மேலே காணலாம்..
இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர், “அண்ணாமலையைப் பொறுத்தவரை அவர் மனதுக்குள் அதிமுக கூட்டணியே இருக்கக்கூடாது என நினைத்துவிட்டார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டியது யார் என தீர்மானிப்பது டெல்லி தலைமையே” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் குறித்து பேசிய வீடியோவை மேலே காணவும்.