"அமித்ஷாவுக்கும், இபிஎஸ்க்கும் இடையே எதோ நடந்திருக்கு"..முறிவுக்கு காரணம் குறித்து விளக்கும் ப்ரியன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை வந்திருந்தார். ஸ்வட்ச் பாரத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார். தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அமுல் கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
இச்சந்திப்பு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் புதிய தலைமுறையிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.